புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பரம்பூர் கிராமத்தில் உள்ள பெரிய கண்மாய் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை நீர்வளத்துறை அதிகாரிகள் காவல்துறையின் பாதுகாப்போடு அகற்றினர். மேலும், பரம்பூர் பெரிய கண்மாயில் வரும் காலங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யக்கூடாது என நீர் வளத்துறை அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்