விராலிமலை: குடும்ப பிரச்னையில் முதியவர் தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் பூதகுடி காலனியை சேர்ந்தவர் முத்து(70). கூலித்தொழிலாளி. குடும்ப பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று(அக்.16) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வேட்டியால் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.