Oct 24, 2024, 11:10 IST/
தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே ஒரு ஜீவ நதி எது தெரியுமா?
Oct 24, 2024, 11:10 IST
தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து நதிகளும் மழையை நம்பி இருக்கும் ஆறுகள் தான். வற்றாத ஜீவ நதி என எதுவும் இல்லை. ஆனால் ஒரு ஆண்டில் பெரும்பாலான நாட்கள் நீர் பாயக்கூடிய ஆறுகளும் உள்ளன. குமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி சுமார் 56 கி.மீ பயணித்து அரபிக் கடலை அடையும் தாமிரபரணியை ஜீவ நதி எனக் கூறலாம். இதற்கு காரணம் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய இரண்டு மழைக் காலங்களிலும் இந்த பகுதி மழையை பெறுகிறது.