செங்கீரை அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

71பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கல்லுகுடியிருப்பு கண்மாய் அருகே பணம் வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் எஸ். ஐ செல்வராஜ் நடத்திய சோதனையில், குமரேசன் (52), கருப்பையா (58), சேகர் (45), கருப்பையா (42) ஆகிய 4 நபர்களை கைது செய்த கே. புதுப்பட்டி போலீசார் அவர்களிடமிருந்து 200 ரூபாய் ரொக்கம், 52 சீட்டுகளை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி