புதுகை அறந்தாங்கி வடவயலை சேர்ந்த சாத்தையா (60) இவர் பைக்கில் புதுவயலில் இருந்து அறந்தாங்கி நோக்கி செல்லும்போது கே புதுப்பட்டியில் எதிரே பைக்கில் வந்த குணா (30) என்பவர் மோதியதில் சாத்தையாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரது மனைவி வசந்தாள் (59) அளித்த புகாரின் அடிப்படையில் கே. புதுப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.