

புதுகை: வாகனம் மோதி ஒருவர் பலி
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்: குளத்தூர் கீழப்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார்(49). சம்பவத்தன்று லெனாவிலக்கு பெட்ரோல் பங்க் அருகில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெயக்குமார் அதே இடத்தில் உயிரிழந்தார். நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.