ஒரு நாளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் செல்போன் பயன்படுத்தினால், கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். செல்போன், லேப்டாப், டேப்லெட் ஆகியவற்றின் திரைகளில் இருக்கும் ஆபத்துகள் குறித்து JAMA நெட்வொர்க் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. குழந்தைகள் முதல் இளம் வயதினர் வரை சுமார் 3.35 லட்சம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் முளையை பாதிக்கும் எனவும் தெரியவந்துள்ளது.