புதுகை அரிமளம் அடுத்த ஒத்தப்புளி குடியிருப்பு பகுதியில் செயல்படும் அரசு பள்ளி பொறுப்பு மற்றும் உதவி தலைமை ஆசிரியராக இருந்த பெருமாள் மீது 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் சைல்டு லைன் அமைப்பின் மூலம் பாலியல் புகார் கொடுத்த நிலையில் பெருமாள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். காவல்துறையினர் பள்ளி மேலாண்மை குழுவிடம் பேசி தக்க நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் கூறியதை அடுத்து மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர்.