புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே எஸ். வையாபுரிப்பட்டியில் வீரமாகாளி அம்மன் கோயில் வீடு பாலாலய விழா நடைபெற்றது. எஸ். வையாபுரிபட்டியில் உள்ள கோயில் புதுப்பிக்கப்பட வேண்டும் என ஊரார்கள் சார்பில் முடிவு செய்து வீரமாகாளி அம்மன் கோயில் வீடு கட்டுவதற்கு பாலாலயம் செய்தனர். இதில் ஏராளமான கிராமமக்கள், ஊர் பங்காளிகள் பலரும் பங்கேற்றனர்.