புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பில்லமங்கலத்தில் உள்ள கண்மாயில் ஊத்தா குத்து மீன்பிடித் திருவிழா இன்று (பிப். 16) வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஏராளமானோர் கலந்து கொண்டு நாட்டு வகை மீன்களான கெளுத்தி, கெண்டை விரால், ஜிலேபி, லோகு, பில்லுக்கெண்டை உள்ளிட்ட 4 கிலோ எடை வரையிலான மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.