புதுகை திருமயம் அருகே உள்ள குலமங்கலம் மலையகோவில் கிராமத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. இதில் 683 காளைகள் அவிழ்க்கப்பட்டன. இதில் 350 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் 45 பேர் காயம் அடைந்த நிலையில், அதில் 12 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.