வங்காளதேசத்தை சேர்ந்த அலாவுதீன் (36) மூன்று திருமணம் செய்த நிலையில் மூவரையும் விவாகரத்து செய்துவிட்டு நூர்ஜஹான் என்ற பெண்ணை 4வது திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் மனைவிக்கு தெரியாமல் அலாவுதீன் 5வது திருமணம் செய்து கொண்டார். இதை கண்டுபிடித்து ஆத்திரமடைந்த நூர்ஜஹான், கணவருடன் சண்டை போட்டு அவரை கத்தியால் குத்தி கொன்றார். இதையடுத்து போலீசார் குற்றவாளியை கைது செய்தனர்.