புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாகிறது. குறிப்பாக இந்த குடிநீரை அதிக அளவில் இப்பகுதி மக்கள் பயன்படுத்துகின்ற நிலையில், நீர் வீணாவதால் பொதுமக்களுக்கு கூடுதல் சிரமம் ஏற்படலாம். ஆகவே அரசு அதிகாரிகள் இதைக் கவனத்தில் கொண்டு உடைந்த குழாயைச் சரிசெய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.