வெயிட்டிங் டிக்கெட்டில் புதிய கட்டுப்பாடு? ரயில் பயணிகள் அதிர்ச்சி
வெயிட்டிங் டிக்கெட்டில் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்வதற்கு ரயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளுடன் பயணிப்பவர்களின் வசதிக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த விதி நடைமுறைக்கு வந்தால், வெயிட்டிங் டிக்கெட்டில் பயணிக்கும் பயணிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.