பிளாஸ்டிக் துகள்கள் பல்வேறு வழியில் நம் உடலுக்குள் சென்றடைந்து, பெரிய அளவில் ஆரோக்கிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இந்தியாவில் விற்கப்படும் அனைத்து உப்பு மற்றும் சர்க்கரைகளில், மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த உப்பையும், சர்க்கரையையும் நாம் அடிக்கடி சாப்பிடும்போது ஒவ்வொரு துளி ரத்தமும் விஷமாகி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது புற்றுநோய் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளின் ஆபத்தை அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.