தேசிய குடும்ப நல சுகாதார ஆய்வில், ரத்த சோகை பாதிப்பு ஆண்களில் 25 சதவீதம், பெண்களில் 57 சதவீதம், பதின் வயது சிறுவர்களில் 31.1 சதவீதம், பதின் பருவ பெண்களில் 59.1 சதவீதம், குழந்தைகளில் 67.1 சதவீதம் இருப்பதாக கூறுகிறது. இது, முந்தைய ஆண்டை விட 5 சதவீதம் அதிகரித்துள்ளது. சிட்ரஸ் பழங்கள், வண்ணக் காய்கறிகள், பருப்பு வகைகள், கீரைகள், உலர் பழங்கள், மீன், மிதமான சிவப்பு இறைச்சி ஆகியவை குறைபாட்டை தவிர்க்க உதவுகின்றன.