குஜராத்தின் வதோதராவில் உள்ள விஸ்வாமித்ரி ஆற்றில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலையை இரு வன அலுவலர்கள் இரு சக்கர வாகனத்தில் உள்ளூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. வாயில் டேப் ஒட்டப்பட்ட முதலையை பிடித்துக்கொண்டு டூவீலரில் இருவரும் சென்றனர். குஜராத்தில் பெய்து வரும் கனமழைக்கு மத்தியில் நகரின் பல்வேறு பகுதிகளில் முதலைகள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன.