
தமிழக பாஜக தலைவர் பதவிக்கு முயற்சிக்கும் நடிகர் சரத்குமார்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் அதிமுக இணைய உள்ளதாக தெரிகிறது. இந்த சூழலில் பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்க டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அவர் நீக்கப்படும் பட்சத்தில் அந்த பதவிக்கு நடிகர் சரத்குமார் முயன்று வருவதாக கூறப்படுகிறது. சரத்குமார் கடந்தாண்டு தனது சமக கட்சியை பாஜகவில் இணைத்தார்.