மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலை ரயில் சேவை இன்று (செப்டம்பர் 01) மீண்டும் தொடங்கியுள்ளது. மண்சரிவால் சேதம் அடைந்த ஊட்டி மலை ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், ரயில் சேவை தொடங்கியுள்ளது. கடந்த 23 நாட்களாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று காலை
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மகழ்ச்சி அடைந்துள்ளனர்.