கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புகள் ஆகியவை முக்கியமான ஊட்டச்சத்துகள். இந்த ஊட்டச்சத்துகள் அனைத்தும் சரி விகிதத்தில் கலந்திருப்பதே சரிவிகித உணவு. தானியங்கள், கீரைகள், கிழங்கு சிறுதானியங்கள் மற்றும் பயறுவகைகளில் அதிகமான அளவு ஊட்டச்சத்து கிடைக்கிறது. இந்த சரிவிகித உணவு, மனித வாழ்க்கை முழுமைக்கும், உடலில் ஏற்படும் வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றங்களுக்கும் அடிப்படையாக அமைகிறது.