கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தலைக்கவசம் அணியாமல் விலை உயர்ந்த பைக்கில் சாகசம் செய்துள்ளார். அதனை வீடியோவாக எடுத்து மாஸ் பிஜிஎம் போட்டு இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த போலீசார், இதுபோன்று நடக்கக்கூடாது என விழிப்புணர்வுடன் கூடிய எச்சரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி வெளியான நிலையில், அந்த செய்திக்கு மாஸாக வசனங்கள் போட்டு ரீல்ஸ் செய்துள்ளார். இதனால், அப்செட்டான போலீசார் இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.