தமிழ்நாடு சட்டப்பேரவை 3 நாட்கள் விடுமுறைக்குப் பின் இன்று(ஏப்.1) மீண்டும் கூடியுள்ளது. பேரவையில் இன்று கேள்வி நேரம், அதைத் தொடர்ந்து நேரமில்லா நேரத்தில் பல விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது. காவிரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டப்பணி குறித்து அதிமுக உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் கொண்டுவரும் கவன ஈர்ப்புத் தீர்மானம் மீதான விவாதம் இன்று நடக்கிறது. இந்த தீர்மானம் மீதான விவாதத்திற்கு நீர்வளத் துறை அமைச்சர் பதிலளிக்கிறார்.