இந்தியாவில் 2025-2026ம் நிதியாண்டு இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. பகல் 11.45 மணி நிலவரப்படி தேசிய பங்குச்சந்தை எண் நிஃப்டி 312 புள்ளிகள் வீழ்ந்து 23,206 க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. மும்பை பங்குச்சந்தை எண் சென்செக்ஸ் 1,211 புள்ளிகள் வீழ்ந்து 76,206 க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. அமெரிக்க அதிபர் அமல்படுத்திய பரஸ்பர விதிகள் உட்பட பல்வேறு அறிவிப்புகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது என்பதால், பங்குச்சந்தை சரிவை எதிர்கொண்டுள்ளது.