கோர ரயில் விபத்து - 3 பேர் பலி

65பார்த்தது
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் இன்று(ஏப்.1) காலை ஃபராக்கா-லால்மதியா எம்ஜிஆர் ரயில் பாதையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மற்றொரு சரக்கு ரயில் மோதியது. இதில் இரண்டு லோகோ பைலட்டுகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 5 ரயில்வே ஊழியர்கள் மற்றும் ஒரு சிஆர்பிஎஃப் ஜவான் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்துவருகிறது.

தொடர்புடைய செய்தி