தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா குறித்து, அவரது மைத்துனர் ஜோஸ் சார்லஸ் மார்டின் X தளத்தில் பரபரப்பு பதிவு போட்டுள்ளார். அந்தப் பதிவில், பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு மன்னிப்பு தெரிவிக்கிறேன். என் தந்தையின் பணத்தை தவறான வழிகளுக்குப் பயன்படுத்தி, எங்கள் குடும்பத்திற்கு ஆதவ் அவப்பெயரை ஏற்படுத்துகிறார். அவர் செய்யும் கிறுக்குத்தனங்களுக்கும், எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது தொடர்ந்தால் வழக்கு தொடர்வேன் என குறிப்பிட்டிருந்தார்.