பிரதமர் நரேந்திர மோடி நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்துக்கு சென்றது, தனது ஓய்வு குறித்து மோகன் பகவத்திடம் தெரிவிக்கவே என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய ராவத், 'பிரதமர் கடந்த 11 ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு சென்றதில்லை. அடுத்த பிரதமர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்தான். 2029 தேர்தலுக்கு முன் மோடி ஓய்வு பெறுவார் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன என கூறியுள்ளார். பிரதமர் மோடிக்கு 75 வயது ஆக உள்ள நிலையில், தொடர்ந்து பதவியில் நீடிக்க மாட்டார் என கூறப்படுகிறது.