சென்னையில் மார்ச் 28 அன்று CSK Vs RCB போட்டி நடந்தது. போட்டியை நேரில் பார்க்கச் சென்ற ரசிகர்களின் ஸ்மார்ட்போன்கள் மாயமானதாக அடுத்தடுத்து புகார் எழுந்தது. இதுதொடர்பாக திருவெல்லிக்கேணி காவல்துறையினர் விசாரணை நடத்தி, மேற்குவங்கம், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 8 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 36 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சைபர் குற்றத்துக்காக பயன்படுத்த திருடப்பட்ட செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன.