லாரி - கார் மோதல்: குழந்தை உட்பட 3 பேர் பலி

76பார்த்தது
லாரி - கார் மோதல்: குழந்தை உட்பட 3 பேர் பலி
சிக்னலில் நின்ற கார் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 1 வயதுடைய குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த சோகம் சென்னையில் நடந்துள்ளது. சிங்கப்பெருமாள் கோவில், திருத்தேரி சிக்னலில் கார் நின்றபோது லாரி பயங்கரமாக மோதியது. இவ்விபத்தில் மதுரையை சேர்ந்த அய்யனார், கார்த்திக், 1 வயது குழந்தை என மூவரும் உயிரிழந்தனர். பிற மூவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி