கொக்கைன் கடத்தல் வழக்கில் முன்னாள் டிஜிபி மகன் கைது
சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று (அக்.24) மெத்தம்பெட்டமைன் என்னும் போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 2.5 கிராம் மெத்தம்பெட்டமைன், ரூ.1 லட்சம் ரொக்கம், 2 செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பேலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அருண் என்பவர் முன்னாள் டிஜிபி ரவீந்திரநாத் என்பவரின் மகன் என்பது தெரியவந்துள்ளது.