பள்ளி மாணவிகளை ஆசிரியை ஒருவர் கடுமையாக தாக்கும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. தெலுங்கானா மாநிலம், விக்ராபாத், கொத்தங்கடி பள்ளி மாணவிகளை ஆசிரியை அவதூறாக பேசி தாக்குதல் நடத்தி இருக்கிறார். ஆசிரியையின் அதிர்ச்சி செயலால் நடுநடுங்கிப்போன மாணவிகள் பதறியபடி நின்றனர். முன்னதாக பெண் ஆசிரியையின் செயலால் 2 மாதங்களுக்கு முன் வேறொரு மாணவி தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆசிரியைக்கு எதிரான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.