கஞ்சா போதை கும்பல் அடாவடி - காவலர் படுகாயம்

57பார்த்தது
கஞ்சா போதை கும்பல் அடாவடி - காவலர் படுகாயம்
ரோந்துப்பணியில் ஈடுபட்ட பாண்டி பஜார் காவலரின் மீது கஞ்சா போதை கும்பல் டூவீலரால் மோதிய சம்பவம் நடந்துள்ளது. சென்னை தி நகர் போலீசார் இன்று அதிகாலை 03:00 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மெரீனாவுக்குச் சென்று கஞ்சா குடித்துவிட்டு வந்த கும்பல், அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்று கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த காவலர் சேந்தன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குகன் (20) கைது செய்யப்பட்டார், இருவருக்கு வலைவீசப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி