5வது மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை
தெலங்கானா மாநிலம் ராம்நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் இருந்து சனா பேகம் (23) என்ற இளம்பெண் குதித்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று (செப்.14) நடந்த இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நன்றி: Raj News Tamil