மணவெளி தொகுதி அபிஷேகப்பாக்கம் முதல் டி.என்.பாளையம் வரை உள்ள பிரதான சாலையை பொதுப்பணித்துறை மூலம் ரூ.1.39 கோடி மதிப்பில் புதிய தார் சாலையாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை சட்டப்பேரவை தலைவர் செல்வம் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கோபி, இளநிலை பொறியாளர் நடராஜன் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் மனோகர், டி.என்.பாளையம் கூட்டுறவு சங்க தலைவர் சுகாதியா, மாயகிருஷ்ணன், ராமகிருஷ்ணன், ஜானகிராமன், கதிரேசன், உமா, வீரபாலன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடன் இருந்தனர்.