ஒரே கருவறையில் 7 அம்மன்கள் உள்ள சக்தி வாய்ந்த கோயில்
நாகை மாவட்டத்தில் நூபர நதி என்னும் கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ளது புலீஸ்வரி அம்மன் திருக்கோயில். இங்கு ஒரே சன்னதியில் 7 அம்மன்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். இதில் புலீஸ்வரி என்ற அம்மனாக வைஷ்ணவி தேவி இருக்கிறார். மற்ற ஆறு தேவியர்கள் முறையே பிராம்ஹி, மகேஸ்வரி, கவுமாரி, வாராயி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் ஆவர். குழந்தை செல்வத்தை வரமாக தரும் தெய்வமாக புலீஸ்வரி அம்மன் இருக்கிறார்.