புதுச்சேரி - Puducherry

புதுச்சேரி: விளையாட்டுதுறை வளர்ச்சி குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை

புதுச்சேரி: விளையாட்டுதுறை வளர்ச்சி குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை

புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAP) 2-வது பொதுக்குழு கூட்டம், வணிக வரி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி, விளையாட்டுத் துறை அமைச்சர் நமச்சிவாயம், வேளாண்துறை அமைச்சரும் புதுச்சேரி ஒலிம்பிக் சங்க தலைவருமான தேனீ. ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி கைப்பந்து சங்க தலைவருமான கல்யாண சுந்தரம், சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொதுக்குழு உறுப்பினருமான ரமேஷ், மேலும் விளையாட்டுத் துறை அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், இந்திய விளையாட்டு ஆணையத்தின் அதிகாரிகள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் ஊழியர்கள் நியமிப்பது, பதவி உயர்வு, பதவி நிரந்தரம், புதிய விளையாட்டு சங்கங்கள் சேர்க்கை, புதிய விளையாட்டு திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தை புதுச்சேரியில் நடைமுறைபடுத்தி, புதுச்சேரியில் விளையாட்டு வீரர்களை தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் உருவாக்குவது மற்றும் தேசிய அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்துவது போன்ற பல்வேறு விளையாட்டுத் துறையின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டன.

வீடியோஸ்


புதுச்சேரி