புதுச்சேரி மண்ணிற்கு பொருந்தாத புதிய கல்வி கொள்கை திட்டத்தை திரும்ப பெற வேண்டும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி தமிழ் உரிமை இயக்கம் சார்பில் புதுச்சேரி கல்வித்துறை வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் உரிமை இயக்க தலைவர் பாவானன் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு புதிய கல்விக் கொள்கை மற்றும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்.