புதுச்சேரி, அரியாங்குப்பம் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் திருமண உதவித் தொகை திட்டத்தின் கீழ் தலா ரூ. 1 லட்சம் வீதம் 4 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சமமும் தொடர் நோய் மருத்துவ உதவி தொகை திட்டத்தின் கீழ் 6 நபர்களுக்கு ரூ. 15, 000 வீதம் ரூ. 90 ஆயிரமும் கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 4 நபர்களுக்கு ரூ. 13, 000 வீதம் ரூ. 52 ஆயிரம் என மொத்தம் ரூ. 5 லட்சத்து 42 ஆயிரம் நிதியிணை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைப்பதற்கான அரசானைகளை சட்டமன்ற உறுப்பானர் பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தி பயனாளிகளுக்கு நேற்று சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வழங்கினார் மேலும் இந்நிகழ்ச்சியில் ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் என் ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.