புதுவை: ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர் ரங்கசாமி

56பார்த்தது
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. புதுச்சேரி புதிய நகராட்சி கட்டிடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு அரசு சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவரை தொடர்ந்து துணை சபாநாயகர் ராஜவேலு, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஏ. கே. டி. ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், கே. எஸ். பி. ரமேஷ் மற்றும் அதிமுகவினர் ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி