புதுச்சேரி நகர பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் நடைபாதை மற்றும் சாலைகளை ஆக்கிரமித்துள்ள கடைகள் மற்றும் வீடுகளை போலீசார் அகற்றி வருகின்றனர். இந்நிலையில் முன் அறிவிப்பு இன்றி நகராட்சி ஊழியர்கள் கடைகளை இடித்து பொருட்களை சேதப்படுத்துவதாக கூறி நகரின் முக்கிய வர்த்தக பகுதியான நேரு வீதி, பாரதி வீதி, ரங்கபிள்ளை வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து இன்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், முறைப்படி நோட்டீஸ் கொடுத்து வியாபாரிகளிடம் தெரிவித்த பின்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தெரிவித்துள்ளார். வியாபாரிகளின் கடை அடைப்பு போராட்டம் காரணமாக நகரப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.