புதுச்சேரி மின்துறையில் காலியாக உள்ள அனைத்து பதவிகளையும் நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டும், மின்துறையில் பணியாற்றிடும் பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் அனைத்து பதவிகளையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்த அடிப்படையில் கூடுதல் நேர பணிக்கு உண்டான தொகையை 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் முன் தேதியிட்டு வழங்க வேண்டும், மின் துறையில் பணியின்போது உயிரிழந்த அனைத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்கும் ஒருமுறை தளர்வு அளித்து கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மின்துறையில் பணிபுரியும் பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மின்துறை தலைமை அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மின்துறை பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனால் புதுச்சேரி மாநிலத்தில் மின் துறை பராமரிப்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதுபோல் மின்கட்டண வசூல் மையங்களும் செயல்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது.