புதுவை சட்டசபை மார்ச் 10ம் தேதி கூடுவதாக சபாநாயகர் அறிவிப்பு

55பார்த்தது
புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச்சில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் காரணமாக மார்ச்சில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆகஸ்ட் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 6 மாதத்திற்கு ஒரு முறை சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்ற விதிமுறைப்படி கடந்த பிப்ரவரி 12ந் தேதி சட்டசபை ஒரு நாள் கூடியது. கூட்டத்தில், அரசின் கூடுதல் செலவினங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்ட காலவரையின்றி சபை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் செல்வம், 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய அடுத்த மாதம் மார்ச் 10-ம் தேதி புதுச்சேரி சட்டசபை மீண்டும் கூடுகிறது என சபாநாயகர் செல்வம் அறிவித்தார். அன்றயை தினம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையாற்றுகிறார். தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. தொடர்ந்து 10-ம் தேதி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என்று சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி