ஜெயலலிதாவின் பிறந்த நாளில் நல திட்டங்களை வாரி வழங்கிய அதிமுக

77பார்த்தது
புதுச்சேரி அதிமுக சார்பில் புரட்சி தலைவி ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில், தலைமைக் கழகத்தில் கழக கொடி ஏற்றி, பட்டாசு வெடித்து, 77 வகையான இனிப்புகள் வைத்து அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கும், புரட்சித் தலைவர் எம். ஜி. ஆரின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று பிறந்த 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. மேலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு தள்ளு வண்டி, தையல் மிஷன், கிரைண்டர், குக்கர், மிக்ஸி, மின்சார அடுப்பு மற்றும் 700 நபர்களுக்கு இலவச வேட்டி, சேலை, மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் ஏராளமான வீட்டு உபயோக பொருட்கள் வாரி வாரி வழங்கப்பட்டது. இதனை ஏராளமான தொண்டர்கள் பெண்கள் பெற்று மகிழ்ச்சியுடன் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி