ஆன்லைன் மோசடி கும்பலிடம் இழந்த பணத்தை மீட்ட சைபர் போலீசார்

59பார்த்தது
புதுச்சேரியைச் சார்ந்த தொழிலதிபர் ஒருவர் இணைய வழியில் வந்த பங்கு வர்த்தகத்தை நம்பி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தார். ஆனால் அவருக்கு லாபம் வராததுடன், முதலீடு செய்த பணத்தையும் அவரால் எடுக்க முடியவில்லை.

இதனையடுத்து அது இணைய வழி மோசடிக்காரர்களால் உருவாக்கப்பட்ட போலியான செயலி என்பதை அறிந்த அவர் இணைய வழி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்து இழந்த பணத்தில் ரூ. 75 லட்ச ரூபாய் பணத்தை இணைய வழி போலீசார் மீட்டு கொடுத்தனர்.

அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அந்த தொழில் அதிபர் நேற்று இணைய வழி காவல் நிலையம் சென்று ஆய்வாளர்கள் மற்றும் காவலர் ஜலாலுதீனுக்கும் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி