பகுதிநேர வேலை வழங்குவதாக கூறி 4 பேரிடம் ரூ. 5½ லட்சம் மோசடி

68பார்த்தது
புதுச்சேரி கொசப்பாளையத்தை சேர்ந்தவர் செண்பகவள்ளி. அவரது செல்போனில் உள்ள சமூக வலைதளத்துக்கு, பகுதிநேர வேலை வழங்குவதாக தகவல் வந்தது. இதனை நம்பி அவர் ரூ. 4 லட்சத்து 41 ஆயிரத்தை ஆன்லைனில் செலுத்தினார். ஆனால் அவருக்கு எந்த வேலையும் வழங்கப்படவில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இதேபோல் புதுச்சேரி கம்பளிக்காரன்குப்பத்தை சேர்ந்த மணிமேகலையிடம் பகுதி நேர வேலை தருவதாக கூறி ரூ. 20 ஆயிரத்து 200, முத்திரையர்பாளையம் வசுமதியிடம் ரூ. 18 ஆயிரம், லாஸ்பேட்டை ஜவகர்லால் என்பவரிடம் ரூ. 65 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.

காலாப்பட்டு மணிபாரதியிடம் வெளிநாட்டில் இருந்து அவரது உறவினர் அவசரமாக பணம் கேட்டதாக கூறி ரூ. 60 ஆயிரம் பெற்று மோசடி நடந்துள்ளது. வெங்கட்டாநகர் அசோகன் ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்து பணம் செலுத்தி ரூ. 1, 500 இழந்தார்.

இது குறித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி