தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடலூருக்கு புதுச்சேரி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்பொழுது புதுச்சேரியில் ஆங்காங்கே திமுகவினர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் ஒரு பகுதியாக அரியாங்குப்பம் அருகே வந்த அவரிடம் தேங்காய்திட்டு பகுதியைச் சேர்ந்த மணிபாரதி, சங்கீதா தம்பதியினர் தங்களது பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்குமாறு கோரி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கையில் குழந்தையை கொடுத்தனர். குழந்தையை வாங்கிக் கொண்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அந்த குழந்தைக்கு ஸ்டாலின் பாரதி என பெயர் சூட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெயர்களை வருகிறது.