கனடாவில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ. 6 லட்சம் மோசடி

59பார்த்தது
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதேவி. இவர் வெளிநாட்டில் வேலை தேடி வந்தார். இந்த நிலையில் அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர் கனடா நாட்டில் உயர்கல்வியுடன் சேர்ந்து பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறினார். இதனை உண்மை என்று நம்பிய ஸ்ரீதேவி சம்மதம் தெரிவித்தார். எனவே அவர் கூறியது போல பரிசீலனை கட்டணமாக பல்வேறு தவணைகளாக ரூ. 6 லட்சத்து 20 ஆயிரம் அனுப்பி வைத்தார். பின்னர் அந்த நபரிடம் இருந்து எந்த தகவல் இல்லை. எனவே அவர் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். ஆனால் அது முடியவில்லை. இதனால் தான் மோசடி செய் யப்பட்டதை உணர்ந்த அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி