புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் தலைவியாக நிஷா நியமனம்

83பார்த்தது
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் மகளிர் காங்கிரஸ் தலைவியாக இருந்த பஞ்சகாந்தியின் பதவிக்காலம் முடிவடைந்ததை ஒட்டி புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் தலைவியாக நிஷா கட்சி மேலிடத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இன்று அவருக்கு காங்கிரஸ் அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் வைத்தியலிங்கம் உள்ளிட்ட கட்சி முக்கிய நிர்வாகிகள் மகளிர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு சால்வை அணிவித்தும் பூங்கொத்துகள் கொடுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் இது குறித்து புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் தலைவி நிஷா கூறும்போது.

தன்னை மகளிர் காங்கிரஸ் தலைவியாக அறிவித்த சோனியா காந்தி ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்ட தலைவர்களுக்கும் புதுச்சேரியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி