புதுச்சேரி வில்லியனூர் பகுதி சுல்தான்பேட்டையைச் சேர்ந்த சபீர், தமிழக பகுதியான வாழப்பட்டாம்
பாளையத்தைச் சேர்ந்த ஞானவேல் என்கிற இரண்டு வாலிபர்கள் நோணாங்குப்பம், அரியாங்குப்பம் போன்ற பகுதிகளுக்கு சென்று மது அருந்திவிட்டு வில்லியனூர் பகுதியை அடுத்த பெரம்பை சுடுகாடு அருகே மீண்டும் மது அருந்தினர். பிறகு இவர்களது மற்றொரு நண்பரான வாழப்பட்டாம்பாளையத்தை சேர்ந்த மதன்குமார் என்பவரை தொலைபேசி மூலமாக அழைத்து மூன்று பேரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் தலைக்கேரிய போதையில் ஞானவேல், மதன்குமார் என்ற இரண்டு பேரும் சேர்ந்து சபீர் என்பவரை தகாத வார்த்தையால் பேசி, சபீரை அடித்துவிட்டு விலை உயர்ந்த செல்போன் மற்றும், மோதிரத்தை அவரிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு, இரண்டு நண்பர்களும் சபீரை இருசக்கர வாகனத்தில் ஏற்றுக்கொண்டு தமிழக பகுதியான அரசூர் சாராயக்கடை அருகே இறக்கி விட்டு சென்றனர்.
பின்பு குடி போதையில் இருந்து சற்று தெளிவான சபீர் தன்னை அடித்து, தன்னிடம் இருந்த விலை உயர்ந்த மொபைல் போன், மோதிரத்தை இரண்டு நண்பர்களான ஞானவேல், மதன்குமார் ஆகியோர் திருடி சென்றதை உணர்ந்த சபீர் வில்லியனூர் காவல் நிலையம் வந்து நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறியதை தொடர்ந்து குற்றவாளிகளான மதன்ராஜ், ஞானவேல் என்று இரண்டு பேரையும் கைது செய்தனர்