

துணை ஜனாதிபதி நிகழ்வில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்படவில்லை
துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், பேராசிரியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படவில்லை, நிகழ்ச்சி தொடங்கியதும் தேசிய கீதம் மட்டுமே இசைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.