நடிகர் ரவிக்குமார் தன்னுடன் நடித்த சக நடிகையான சுமித்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 70-களில் கேரளாவில் மிகப் பிரபலமான ஜோடியாக இவர்கள் இருவரும் இருந்து வந்தனர். ஆனால், திருமணமான சில ஆண்டுகளிலேயே இவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். ரவிக்குமாரை பிரிந்த சுமித்ரா, கன்னட இயக்குநர் ராஜேந்திர பாபு என்பவரை திருமணம் செய்துகொண்டார். ரவிக்குமாரும் கற்பகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.